×

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்!: நிலக்கரி, பெரும் எரிசக்தி நிறுவனமான என்.எல்.சி.யின் நிகர லாபம் கடும் சரிவு..!!

சென்னை: நிலக்கரி மற்றும் பெரும் எரிசக்தி நிறுவனமான என்.எல்.சி.யின் நிகர லாபம் கடுமையாக சரிந்துள்ளது. என்.எல்.சி. இந்தியாவின் நிகர லாபம் முதல் காலாண்டில் 35 சதவீதம் அளவுக்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 2023 ஜூன் 30 வரையிலான முதல் காலாண்டில் என்.எல்.சி. நிகர லாபம் 35 சதவீதம் சரிந்து ரூ.331 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் என்.எல்.சி. நிகர லாபம் ரூ.506 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.331 கோடியாக சரிந்துள்ளது.

2023 ஜூன் காலாண்டில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் வருவாய் 16 சதவீதம் சரிந்து ரூ.2,601 கோடியாக உள்ளது. உள்ளூர் மக்கள் எதிர்ப்பு காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால் என்.எல்.சி. வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்திற்காக நிலம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் என்.எல்.சி. மின் உற்பத்தி கடுமையாக பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது நினைவுகூரத்தக்கது.

The post நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்!: நிலக்கரி, பெரும் எரிசக்தி நிறுவனமான என்.எல்.சி.யின் நிகர லாபம் கடும் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : N.Y. l. RC ,Chennai ,N.N. l. RC ,India ,N. l. RC ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்